#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முதல் டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் மிரட்டல் பந்துவீச்சு! அடுத்தடுத்து சரியும் இந்திய வீரர்கள்
மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது டெஸ்ட் தொடரை ஆடி வருகிறது. இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் டெஸ்ட் போட்டி இன்று துவங்கியது. இரு அணிகளுக்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் போட்டி இதுவாகும்.
கோலி தலைமையிலான இந்திய அணியில் மயங் அகர்வால், புஜாரா, ரஹானே, ஹனுமா விஹாரி, இஷாந்த் ஷர்மா, பும்ரா ஆகியோர் இன்றைய போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளனர். ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பராக சேர்க்கப்பட்டுள்ளார். ரோகித் சர்மாவிற்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.
இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத் தொடர்ந்து இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக கே.எல்.ராகுல் மற்றும் மயங் அகர்வால் களமிறங்கினர்.
வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளர் கீமர் ரோச் வீசிய 5 ஆவது ஓவரில் மயங் அகர்வால்(5), புஜாரா(2) இருவரும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் விராட் கோலியும் கேப்ரியல் வீசிய 8 ஆவது ஓவரிலேயே 9 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
தற்போது கே.எல்.ராகுலுடன் ரஹானே ஜோடி சேர்ந்து ஆடி வருகிறார். 10 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 32 ரன்கள் எடுத்துள்ளது.