#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
மளமளவென சரியும் இந்திய வீரர்கள்! 50 ரன்கள் எடுப்பதே சிரமம் போல
நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து வரும் இந்திய அணி தொடக்கத்திலேயே 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.
நியூசிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்று வென்று கைப்பற்றியுள்ளது இந்தியா. இந்நிலையில் மீதமுள்ள 2 போட்டிகளிலும் இதுவரை வாய்ப்பு கிடைக்காமல் இருக்கும் வீரர்களை களமிறக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த போட்டியில் கேப்டனாக களமிறங்கும் ரோகித் சர்மாவிற்கு இது 200வது ஒருநாள் போட்டி ஆகும்.
இந்த 2 போட்டிகளிலும் இருந்து இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு ஓய்வளிக்கப்படுவதாகவும் அவருக்கு பதில் ரோகித் சர்மா கேப்டனாக செயல்படுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. எனவே இந்த போட்டியில் கோலியின் இடத்தை நிரப்ப அறிமுக வீரர் சுபம் கில் களமிறக்கப்பட்டுள்ளார்.
துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா 13 மற்றும் 7 ரன்கள் எடுத்து அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதனை தொடர்ந்து அம்பத்தி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தனர். அதனைத் தொடர்ந்து சுபம் கில் 9 ரன்னிலும் ஜாதவ் ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர்.