பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நேற்றைய போட்டியில் இந்தியா செய்த ஒரே நல்ல காரியம் இதுதான்! ரசிகர்கள் ஆறுதல்
நேற்று நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து இடம் தோல்வியை தழுவியது. இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு இதுதான் முதல் தோல்வி.
இலங்கை மற்றும் ஆஸ்திரேலிய அணிகளிடம் தொடர்ந்து இரண்டு போட்டிகளில் தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழைய நேற்றைய போட்டியில் நிச்சயம் வென்றே தீர வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டது. அதற்கு ஏற்றார்போல் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்து துறைகளிலும் சிறப்பாக செயல்பட்டு இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்திய அணியை பொறுத்தவரை நேற்றைய ஆட்டத்தில் எந்தத் துறையும் சிறந்து விளங்கியது போல் தென்படவில்லை. இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் நேற்று அதிகமான ரன்களை விட்டுக் கொடுத்தனர். அடித்து ஆட வேண்டிய நேரத்தில் விக்கெட்டுகளை பறிகொடுத்து பேட்ஸ்மேன்களும் தடுமாறினர்.
இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து அணி அரையிறுதிக்குள் நுழையும் வாய்ப்பை தக்க வைத்துள்ளது. இதனால் அரை இறுதிக்குள் நுழையும் கனவோடு இருந்த பாகிஸ்தான் அணிக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்த போட்டியில் இங்கிலாந்து அணி நியூசிலாந்தை வீழ்த்தினால் நிச்சயம் அரை இறுதிக்குள் நுழைந்து விடும்.
நேற்றைய போட்டியில் இந்தியா செய்த ஒரே நல்ல காரியம் பாக்கிஸ்தானுக்கான அரையிறுதி வாய்ப்பை குறைத்ததுதான். இருப்பினும் பங்களாதேஷ் உடன் அதிகமான ரன் விகிதத்தில் வெற்றி பெற்றால் அரையிறுதிக்குள் நுழைய பாகிஸ்தான் அணிக்கும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.