#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோலி, ஸ்ரேயாஸ் விளாசல்; கடைசி நேரத்தில் சொதப்பிய இந்திய அணி!
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்துள்ளது.
டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். முதல் ஓவரிலேயே தவான்(2) விக்கெட்டை இழக்க ரோகித் சர்மா(18) 16 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து ரிஷப் பண்ட் 23 ஆவது ஓவரில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பின்னர் ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கோலி தனது 42 ஆவது சதத்தை விளாசினார். ஸ்ரேயஸ் ஐயர் மூன்றாவது அரைசதத்தை அடித்தார். சிறப்பாக ஆடிய கோலி 120 ரன்கள் எடுத்து 42 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். அப்போது அணியின் எண்ணிக்கை 226.
இந்தியா 300 ரன்கள் விளாசும் என்ற நம்பிக்கையில் இருந்த ரசிகர்களுக்கு கடைசியில் ஏமாற்றமே மிஞ்சியது. கடைசி நேரத்தில் ஸ்ரேயஸ் ஐயர் 71, கேதர் ஜாதவ் 16, புவனேஷ்வர் குமார் 1 ரன்னில் ஆட்டமிழக்க இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்துள்ளது.