அடித்து துவம்சம் செய்த ஆஸ்திரேலிய அணி.. முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி படுதோல்வி..



India tour of Australia 2020 Australia won first ODI match

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள், T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி மிக சிறப்பாக விளையாடி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 374 ரன்கள் எடுத்தது.

பின்ச் 114 ரன்கள், வார்னர் 69 ரன்கள், ஸ்மித் 105 ரன்கள் என ஆஸ்திரேலிய அணி வீரர்கள் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சினை பறக்கவிட்டனர். இதனை அடுத்து 375 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி வீரர்கள் தொடக்கம் முதல் சிறப்பாக விளையாடினர்.

தொடக்க வீர்களாக ஷிகர் தவான் மற்றும் மயங்க் அகர்வால் ருவரும் களமிறங்கியநிலையில் முதல் ஐந்து ஓவர்களில் 53 ரன்கள் எடுத்தனர். ஆறாவது ஓவரில் மயங்க் அகர்வால் 18 பந்துகளில் 22 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து அணியின் கேப்டன் விராட்கோலி 21 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்க, அவருக்கு அடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களிலும், கே.எல்.ராகுல் 12 ரன்களிலும், ஷிகர் தவான் 74 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

ஹர்திக் பாண்டிய மிக அதிரடியாக விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதனை அடுத்து இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுத்து. இதனை அடுத்து முதல் ஒரு நாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 66 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.