பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
தடுமாறிய முன்னணி வீரர்கள்..! முட்டி மோதி கெளரவமான ஸ்கோரைப் பெற்றுத் தந்த மணிஷ் பாண்டே!
நுஸிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட T20 தொடரில் விளையாடிவருகிறது. இதற்கு முன் நடந்த மூன்று போட்டிகளிலும் வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியுள்ளது இந்திய அணி. இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் 4 வது போட்டியில் இந்திய அணி விளையாடிவருகிறது.
டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதனை அடுத்து முதலில் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. KL ராகுல் மட்டும் சற்று நிதானமாக ஆடி 39 ரன்கள் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
இதனை அடுத்து மனிஷ் பாண்டே சற்று அதிரடியாக விளையாடி 50 ரன்கள் எடுத்து இந்திய அணியின் எண்ணிக்கையை சற்று உயர்த்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது.
166 என்ற இலக்குடன் களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி தற்போதுவரை 4 ஓவர்கள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன்கள் எடுத்து விளையாடிவருகிறது.