#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
டெய்லரை தெறிக்க விட்ட விஜய் சங்கர்; ஸ்டம்புகள் சிதறும் அருமையான ரன் அவுட்; வைரலாகும் வீடியோ.!
இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது டி20 போட்டி நேற்று ஆக்லாந்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.
கடந்த போட்டியில் மிகவும் மோசமாக தோல்வியுற்ற இந்திய அணி அதே வீரர்களுடன் களமிறங்கியது. நியூசிலாந்து அணியில் எந்த மாற்றமும் இல்லை. அதனை தொடர்ந்து முதலில் ஆடிய நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்கள் எடுத்தது.
159 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா, தொடக்கம் முதலே அடித்து ஆடினார். அதிரடியாக ஆடிய அவர், 3 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 29 பந்துகளில் 50 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட், பொறுப்புடன் ஆடினார். 19வது ஓவரிலேயே இலக்கை எட்டி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது.
நியூசிலாந்து அணியின் பேட்டிங்கின் போது, புவனேஷ்வர் குமார் 19வது ஓவரை வீசினார். அந்த ஓவரின்போது சாண்ட்னெரும் ரோஸ் டெய்லரும் களத்தில் இருந்தனர். புவனேஷ்வர் குமார் வீசிய 19வது ஓவரின் கடைசி பந்தை சாண்ட்னெர் லாங் ஆன் திசையில் அடித்துவிட்டு, அவரும் டெய்லரும் ரன் ஓடினர். அந்த பந்தை வேகமாக ஓடிச்சென்று பிடித்த விஜய் சங்கர், பவுண்டரில் லைனிலிருந்து மிக துல்லியமாக ஸ்டம்பில் அடித்தார். விஜய் சங்கர் விட்ட த்ரோ, நேரடியாக ஸ்டம்பில் அடித்துவிடும் என்பதை அறிந்த புவனேஷ்வர் குமார், அந்த பந்தை கையில் பிடிக்கவில்லை. இதையடுத்து இரண்டாவது ரன்னை ஓடிய டெய்லர், விஜய் சங்கரின் அபாரமான த்ரோவில் ரன் அவுட்டாகி வெளியேறினார்.
Watch “bhuvi's anticipation_edit_0” on #Vimeo https://t.co/2FLDH0chve
— soosairaj (@SoosaiMca) February 9, 2019
விஜய் சங்கரின் மிக துல்லியமான த்ரோவால் இந்திய வீரர்கள் மகிழ்ச்சியடைந்து அவரை வெகுவாக பாராட்டினர். ஆல்ரவுண்டரான விஜய் சங்கர், பேட்டிங் - பவுலிங்கை கடந்து ஃபீல்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.