#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தன்னையும் மறந்து விராட்கோலி செய்த காரியம்! இணையத்தில் வைரலாகும் வீடியோ.
இந்தியா - வெஸ்டிண்டிஸ் அணிகள் மோதும் இரண்டவது டெஸ்ட் போட்டி ஜமைக்காவில் நடந்துவருகிறது. இதில் முதலில் பேட் செய்த இந்திய அணி 416 ஓட்டங்கள் பெற்றது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய மயங் அகர்வால் 55 ஓட்டங்களும், விராட்கோலி 76 ஓட்டங்களும் பெற்றனர்.
இதனை அடுத்து ஹனுமா விகாரியுடன் ஜோடிசேர்ந்த இந்திய அணியின் பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா சிறப்பாக விளையாடி 80 பந்துகளில் 57 ஓட்டங்கள் பெற்றார். டெஸ்ட் போட்டிகளில் இஷாந்த் சர்மா தனது முதல் அரை சதத்தை பதிவு செய்தார். அதுவும் 69 பந்துகளிலையே இஷாந்த் சர்மா 50 ரன்களை கடந்தார்.
இஷாந்த் சர்மா சிறப்பாக விளையாடி தனது முதல் அரைசதத்தை நிறைவு செய்தததை பெவிலியனில் இருந்து பார்த்துக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி தன்னையும் மறந்து உற்சாகத்தில் கைதட்டி கொண்டாடினர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகிவருகிறது.
Maiden Test Fifty for Ishant Sharma 👏#WIvIND pic.twitter.com/AhKmVBOUjp
— Anupam (@Anupam381) August 31, 2019