#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
வாஷ் அவுட் செய்யுமா இந்திய அணி..! பலத்த அடியில் ஆக்ரோஷத்தில் இருக்கும் வெஸ்ட் இண்டீஸ்.!
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 ஒருநாள் போட்டி தொடரில் ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி முதல் 2 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 3 ரன் வித்தியாசத்திலும், 2-வது ஆட்டத்தில் 2 விக்கெட் வித்தியாசத்திலும் வெற்றி பெற்றது.
இந்தநிலையில் இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த ஆட்டத்தில் ஆறுதல் வெற்றிக்காக வெஸ்ட் இண்டீஸ் அணி தீவிரம் காட்டுவார்கள் என ஏதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தொடர்ந்து 8 ஒரு நாள் போட்டிகளில் தோற்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இந்த ஆட்டத்தில் ஆக்ரோஷத்துடன் ஆடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டிக்கான இரு அணிகளின் உத்தேச பட்டியல்
இந்தியா:
ஷிகர் தவான் (கேப்டன்), சுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ் அல்லது ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்ஷர் பட்டேல் அல்லது ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது சிராஜ், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ்கான் அல்லது பிரசித் கிருஷ்ணா.
வெஸ்ட் இண்டீஸ்:
ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ், ஷமார் புரூக்ஸ் அல்லது கீசி கார்டி, பிரான்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோமன் பவெல், அகில் ஹூசைன், ரொமாரியோ ஷெப்பர்டு அல்லது கீமோ பால், அல்ஜாரி ஜோசப், ஜெய்டன் சீலஸ், ஹைடன் வால்ஷ்.