பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
#INDvsPAK: மழையின் காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டால் இந்தியா தான் வெற்றி! எப்படி தெரியுமா?
இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை போட்டி மழையின் காரணமாக பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியானது அப்படியே கைவிடப்பட்டால் டிஎல்எஸ்
விதிமுறைப்படி இந்திய அணி வெற்றி பெறும்.
உலகமே எதிர்பார்த்த இந்தியா-பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான உலக கோப்பை போட்டி மழையால் பாதிப்பு ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சம் அனைவருக்கும் இருந்து வந்தது. ஆனால் அதிர்ஷ்டவசமாக இடையிடையே மழை பெய்தாலும் மாற்றத்திற்கு ஒரு முடிவை அறிவிக்கும் நிலையில் கொண்டு வந்து சேர்த்தது வானிலை.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்த போது 47-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு துவங்கப்பட்ட ஆட்டத்தின் முடிவில் இந்தியா 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்ஸ் துவங்குவதற்கு 15 நிமிடங்களே கால அவகாசம் கொடுக்கப்பட்டது. ஆனால் மீண்டும் மழை குறுக்கிட்டதால் மேலும் 15 நிமிடங்கள் தாமதமாகவே இரண்டாவது இன்னிங்ஸ் துவங்கியது.
இரண்டாவது இன்னிங்ஸில் துவங்கப்பட்ட சில நிமிடங்களிலேயே லேசான தூறல் இருந்தாலும் ஆட்டத்தை பாதிக்கும் அளவிற்கு மழை பெய்யவில்லை. அதனை தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 35 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 166 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் மீண்டும் மழை குறுக்கிட்டது. இந்த முறை சற்று கனமாக பெய்ததால் ஆட்டம் இடையில் நிறுத்தப்பட்டது. இரு அணிகளும் 20 ஓவர்களுக்கு மேல் ஆடிவிட்டால் டிஎல்எஸ் விதிமுறைப்படி ஆட்டத்தில் முடிவினை நடுவர்கள் அறிவிக்க முடியும்.
அந்த வகையில் தற்போது பாகிஸ்தான் அணி 35 ஓவர்கள் ஆடி முடித்து விட்டது. எனவே தற்பொழுது டிஎல்எஸ் விதிமுறைப்படி பாகிஸ்தான் வெற்றி பெற வேண்டுமெனில் 35 ஓவர்களில் 252 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். ஆனால் பாகிஸ்தான் அணி 86 ரன்கள் பின்தங்கிய நிலையில் இருந்து வருகிறது எனவே இப்படியே ஆட்டம் தொடர்ந்து நடைபெறாமல் கைவிடப்பட்டால் டிஎல்எஸ் முறைப்படி இந்திய அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெரும்.