#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணியின் அட்டகாசமான பந்துவீச்சில் சுருண்ட வெஸ்ட் இண்டீஸ்! இந்தியா அபார வெற்றி
நேற்று நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை 59(DLS) ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது.
இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 279 ரன்கள் எடுத்தது. விராட் கோலி 120, ஸ்ரேயஸ் ஐயர் 71 ரன்கள் எடுத்தனர்.
தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை துவங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கெய்ல் மற்றும் லீவிஸ் நிதானமாக ஆட்டத்தை துவங்கினர். கெய்ல் 10 ஆவது ஓவரில் 11 ரன்னில் ஆட்டமிழக்க ஹோப் 13 ஆவது ஓவரில் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அதன் பிறகு மழை குறுக்கிடவே ஆட்டம் 46 ஓவர்களாக குறைக்கப்பட்டு 270 இலக்காக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அதன் பின்னர் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட்டுகள் மளமளவென சரியத் தொடங்கின.
லீவிஸ் அதிகபட்சமாக 65, பூரன் 42 ரன்கள் எடுத்தனர். 42 ஆவது ஓவரிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 210 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் புவனேஸ்வர் குமார் 4, சமி, குல்தீப் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.
இந்திய அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 120 ரன்கள் எடுத்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்தியா இந்த தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி வரும் புதன்கிழமை நடைபெற உள்ளது.