#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கோலியை மிஞ்சி நம்பர்1 பேட்ஸ்மேனான இந்திய வீரர்; யார் தெரியுமா?
ஒரு நாள் போட்டியில் சேஸ் செய்யும் போது அதிக ரன் சராசரி வைத்துள்ள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் தோனி.
முதல் போட்டியில் 100 பந்துகளில் தோனி அரைசதம் அடித்தது தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் என பல தரப்பில் இருந்து விமர்சணங்கள் எழுந்தன. அத்தனை விமர்சனங்களுக்கும் தோனி தனது பேட்டிங் மூலம் இரண்டாவது ஒருநாள் போட்டியில் பதிலளித்தார். "நான் வீழ்வேன் என நினைத்தாயோ" என்ற வசனத்தை தோனியுடன் சேர்த்து ரசிகர்கள் உற்சாகமாக பகிர்ந்து வருகின்றனர்.
சிட்னி, அடிலெய்டு என அடுத்தடுத்து அரைசதங்கள் அடித்து தோனி அசத்தியுள்ளார். இதனால் தோனியின் பேட்டிங் குறித்து விமர்சிப்பவர்கள் வாயடைத்து போயுள்ளனர்.
தோனி ஒரு நாள் போட்டியில் சேஸ் செய்யும் போது அதிக ரன் சராசரி வைத்துள்ள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இதில் தோனிக்கு அடுத்தபடியாக கோலி, மைக்கேல் பெவன், டிவில்லியர்ஸ் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர்.
அதிக ரன் சராசரி வைத்துள்ள வீரர்கள்:
எம்.எஸ் தோனி - 99.85
விராட் கோலி- 99.04
மைக்கேல் பெவன் - 86.25
டிவில்லியர்ஸ் - 82.77
ஜோ ரூட் - 77.80
மைக்கேல் கிளார்க் - 73.86