சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
இந்திய அணியில் இடம் கிடைக்காதது குறித்து ஆதங்கத்துடன் அமித் மிஸ்ரா.
இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளராக விளங்குபவர் அமித் மிஸ்ரா. இவர் இந்திய அணிக்காக பல போட்டிகளில் ஆடியுள்ளார். இதில் பெரும்பான்மை போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு வழி வகுத்துள்ளார். இந்த நிலையில் தற்போது இந்திய அணியில் இடம் கிடைக்காமல் வெளியே உள்ளார். ஒரு கட்டத்தில் இந்திய அணிக்கு மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட அமித் மிஸ்ரா தற்போது இந்திய அணியில் இடம் இல்லாமல் தவித்து வருகிறார்.
பல இளம் சுழற்பந்து வீச்சாளர்கள் அணிக்கு வருகை தந்து சிறப்பாக செயல்படுவதால் அவர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் தற்போது பல வீரர்கள் உள்ளே வெளியே ஆடிவருகின்றனர். அவர்களில் அமித் மிஸ்ராவும் ஒருவர். கடைசியாக 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் இந்திய அணியில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை .
இதுகுறித்து தற்போது அவர் கூறும்போது, நான் எனது இடத்தை வேறு எந்த வீரரிடமும் இழக்கவில்லை . எனது காயங்கள் காரணமாகவே இந்திய அணியில் எனக்கு இடமில்லாமல் போனது அவ்வப்போது காயமாவதால் என்னால் மீண்டு மீண்டும் அணிக்கு சரியாக ஆட முடியவில்லை. நான் சரியான ஒரு இடத்தைப் பிடித்திருக்கிறேன் என்று நினைக்கிறேன். ஆனால் காயங்கள் என்னை மீண்டும் மீண்டும் பின்னே இழுத்து வந்துவிட்டது என்று கூறினார்.
அகில இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய சுழற்பந்து வீச்சாளராக வரவேண்டியவர் ஆனால் காலம் அவரை பின்னுக்கு தள்ளிவிட்டது. மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின், அக்ஷர் பட்டேல், ரவீந்திர ஜடேஜா என பல இளம் வீரர்கள் அடுத்தடுத்து இந்திய அணியில் இடம்பிடித்து அசத்தி வந்தனர் இதன் காரணமாகவும் அமித் மிஸ்ரா விற்கு 30 வயதிற்கு மேல் ஆகிறது என்ற காரணமாகவும் எதிர்கால நோக்குடனும் அவர் வெளியே வைக்கப்பட் டுள்ளார். தற்போது மீண்டும் இந்திய அணியில் இடம் பிடித்த தீருவேன் என்று கங்கணம் கட்டி ஆடி வருகிறார்.
தற்போது விஜய் ஹசாரே ஒருநாள் தொடரின் ஆடவர் உத்தரபிரதேச அணியில் இடம்பிடித்துள்ளார் இந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.