#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஊரடங்கில் தனது மகனுடன் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் செய்த காரியம்! அசத்தலான வேண்டுகோளுடன் வைரலாகும் வீடியோ!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவி நாளுக்குநாள் பாதிக்கப்பட்டோர் மற்றும் பலியானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துகொண்டே வருகிறது. இந்நிலையில் நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது ஐந்தாவது கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஐபிஎல் போட்டிகள், சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்ட நிலையில் விளையாட்டு வீரர்கள் பலரும் தங்களது குடும்பங்களுடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் சிலர் சமூக வலைதளங்களில் பிசியாக உள்ளனர்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர் ஷிகர் தவான் தனது மகனுடன் சாலைகளில் பசியுடன் சுற்றித்திரியும் மாடுகளுக்கு காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவாக அளித்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்த வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட அவர் அதில், ஒரு தந்தையாக எனது மகனுக்கு வாழ்க்கையின் உண்மையான மதிப்பு குறித்தும், பிறரிடம் எவ்வாறு அன்பாக நடந்து கொள்ள வேண்டும், அதிலும் குறிப்பாக யாருக்கு உதவி தேவைப்படுகிறதோ அவர்களுக்கு எப்படி உதவ வேண்டும் என்பதை குறித்தும் கற்றுக் கொடுப்பதை மிக முக்கியமாக நினைக்கிறேன்.
இந்த கடினமான தருணத்தில் பசியுடன் இருக்கும் கால்நடைகளுக்கு உணவளியுங்கள். இந்த முக்கிய பாடத்தை எனது மகனுக்கு கற்றுக் கொடுப்பதில் நான் மிகவும் பெருமை அடைகிறேன். நீங்களும் உங்களால் முடிந்த அளவிற்கு பிறருக்கு உதவ வேண்டும் என பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.