கிரிக்கெட்டில் இதுதான் எனது கடைசி ஓவராக இருக்குமோ.. விஜய் சங்கர் பரபரப்பு பேட்டி.!



indian-cricket-player-vijay-shanker

கிரிக்கெட்டில் எனது கடைசி பந்துவீச்சாக இருக்குமோ என்று பயந்து தான் அந்த கடைசி வரை வீசினேன் என்று விஜய் சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி அந்த அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் நேற்று முன்தினம் விளையாடியது. இந்த போட்டியில் இந்திய அணி கடைசி நேரத்தில் திரில்லிங் வெற்றி பெற்றது.

அந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங்கை பொறுத்த வரையில் விராட் கோலிக்கு பிறகு சிறப்பாக பேட் செய்து அதிக ரன்களை அடித்தார் விஜய் சங்கர். ஆனால் துரதிஷ்டவசமாக ரன் அவுட் ஆனார். 

Vijay shankar

கடந்த ஆண்டு நிடாஸ் டிராபி தொடரின் போது வங்கதேசத்துக்கு எதிரான போட்டியின் போது  விஜய் சங்கர் கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இந்நிலையில் கடைசி ஓவரில் சிறப்பாக பந்து வீசி அணிக்கு வெற்றியை தேடித் தந்துள்ளார். இதனால் உலக கோப்பை போட்டிக்கு தேர்வாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் இந்திய அணியின் வெற்றி குறித்து விஜய் சங்கர் கூறும்போது: நான் ஏற்கனவே கூறியது தான் உலகக் கோப்பை போட்டிக்கு தேர்வாவது குறித்து நான் சிந்திக்கவில்லை. இன்னும் நிறைய போட்டிகள் உள்ளன நான் பங்கேற்கும் அனைத்துப் போட்டிகளும் முக்கியத்துவம் வாய்ந்தது தான். கடந்த ஆண்டு நிடாஸ் டிராபி தொடரின் போது பல அனுபவங்களை கற்றுக் கொண்டேன்.



 

அதிலிருந்து அணிக்கு நடுநிலை வகித்து எப்படி வெற்றியை பெற்றுத் தருவது என்பது ஒன்றுதான் எனது குறிக்கோளாக உள்ளது. இந்த போட்டியை பொறுத்தவரை 43, 44 ஆவது ஓவர்களுக்கு பிறகு பந்து வீசுவேன் என்று எதிர்பார்த்தேன். அதனால் என்னை தயார்படுத்திக் கொண்டேன் ஆனால் 50 வது ஓவரை வீசுவதற்கு கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது.

48 வது  ஓவரை வீசிய பும்ரா சரியான லென்ந்தில் போடு என்று சில சில அறிவுரைகளை வழங்கினார். அதன்படி செயல்பட்டதால் இந்த ஓவரில் 2 விக்கெட்டை வீழ்த்த முடிந்தது. உண்மையில் அந்த கடைசி வரை வீசும் போது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் இதுதான் கடைசி பந்துவீச்சாக இருக்குமோ என்று பயமாகத்தான் இருந்தது. ஆனால் அதுவே எனது வாழ்க்கையின் திருப்புமுனையாக அமைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.