#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தங்கம் வென்று தேசம் திரும்பிய வீரமங்கைக்கு, விமான நிலையத்தில் நிச்சயதார்த்தம்!.
ஆசியப் போட்டிகளில் தங்கம் வென்று இந்திய நாட்டிற்கு பெருமை சேர்த்த இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை விக்னேஷ் போகத்துக்கு விமான நிலையத்தில் வைத்து நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
தற்பொழுது நடைபெற்றுவரும் 18 வது ஆசிய விளையாட்டுப் போட் டியில் இந்தியாவை சேர்ந்த மல்யுத்த வீராங்கனை விக்னேஷ் போகத் ஜகர்தாவில், பெண்கள் மல்யுத்தப் போட்டியின் 50 கிலோ எடைப் பிரிவில், ஜப்பானின் யூகிரியை இறுதிப் போட் டியில் எதிர்கொண்டார்.
இந்தப் போட்டியின் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்திய வினேஷ் போகத் இறுதியில்,ஜப்பான் நாட்டின் யூகிரியை தோற்கடித்து அபாரமாக தங்கம் வென்றார்.
வெற்றிமுகத்துடன் தங்க மங்கையாக நாடு திரும்பிய விக்னேஷ் போகத்க்கு டெல்லி விமான நிலையத்தில் வைத்து இவரது நீண்ட நாள் நண்பரான சோம்வீர் ரதியுடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்துகொண்டார்கள்.