#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் இவர்தானா! வெளியான முக்கிய தகவல்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரியின் பதவி காலம் விரைவில் முடிவடைகிறது. இந்தநிலையில் புதிய பயிற்சியாளரை நியமிக்கும் நடவடிக்கையில் பி.சி.சி.ஐ களமிறங்கியுள்ளது.
இதற்காக, தலைமை பயிற்சியாளர் உட்பட மற்ற பயிற்சியாளர்களுக்கான பதவிகளுக்கு, தகுதியுடைய நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பி.சி.சி.ஐ அறிவித்தது. ஜூலை 30ஆம் திகதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, முன்னணி பயிற்சியாளர்கள் பலர் விண்ணப்பித்து வருகின்றனர். குறிப்பாக, பீல்டிங் பயிற்சியாளர் பயிற்சிக்கு தென் ஆப்பிரிக்காவின் ஜாண்டி ரோட்ஸ் விண்ணப்பித்துள்ளதாக அவரே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இந்திய தலைமை பயிற்சியாளர் பதவிக்கு நியூசிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் மைக் ஹெசன் எதிர்பாராத வகையில் விண்ணபிக்க முடிவெடுத்துள்ளார் என்று கூறப்படுகிறது.
இவர் 6 ஆண்டுகளாக நியூசிலாந்தின் தலைமை பயிற்சியாளராக இருந்தவர். இவரது பயிற்சி காலத்தில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பையில் இறுதிப்போட்டி வரை சென்றது. தற்போது ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்கு பயிற்சியாளராக இருக்கும் இவர் இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க உள்ளதாகவும், அவர் விண்ணப்பித்தால் நிச்சயம் பயிற்சியாளராக நியமிக்கப்படுவார் என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.