#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
BCCI அதிரடி: விராட் கோலி நீக்கம், கேப்டனாகும் ரோஹித் சர்மா
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் செப்டம்பர் 15 முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
1984-ம் ஆண்டில் இருந்து நடத்தப்பட்டு வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இதுவரை நடந்த 13 போட்டிகளில் இந்திய அணி 6 முறையும், இலங்கை 5 முறையும், பாகிஸ்தான் 2 முறையும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளன.
இந்நிலையில் 14-வது ஆசியக் கோப்பைப் போட்டி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வரும் 15-ம் தேதி தொடங்குகிறது. இறுதிப்போட்டி 28 ஆம் தேதி நடக்கிறது. மொத்தம் 13 போட்டிகள் நடக்கின்றன.
இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் மற்றும் தகுதிச்சுற்றில் வெற்றி பெறும் அணி என 6 அணிகள் இதில் பங்கேற்கிறது. தகுதிச்சுற்று ஆட்டங்களில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர், ஏமன், நேபாளம், மலேசியா, ஹாங்காங் ஆகிய அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி ஏ பிரிவில் இடம் பெறும்.
முதல் போட்டியில் இலங்கை அணியும், பங்களாதேஷும் மோதுகின்றன. செப்டம்பர் 19 ஆம் தேதி இந்திய அணியை எதிர்கொள்கிறது பாகிஸ்தான்.
இந்நிலையில் ஆசிய கோப்பைக்கான வீரர்கள் தேர்வு மும்பையில் இன்று நடக்கிறது. தேர்வுக் குழுத் தலைவர் எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான குழு, மும்பையில் உள்ள இந்திய கிரிக்கெட் வாரிய அலுவலகத்தில் கூடி வீரர்களை தேர்வு செய்தது.
இந்த தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதில் முக்கிய மாற்றமாக விராட் கோலிக்கு ஓய்வளிக்கப்பட்டு, ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பை ஏற்கிறார். அனுபவ தோனி இருப்பதால் அவர் கை கொடுப்பார் என தெரிகிறது. ஷிகர் தவான் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பத்தி ராயுடு மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். பந்துவீச்சாளர்களில் வழக்கமான வீரர்கள் தவிர்த்து ஷர்துல் தாக்கூர், காலீல் அஹ்மத் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர். கீழே முழு வீரர்கள் பட்டியலை காணலாம்.
ஆசிய கோப்பைக்கான இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), ஷிகர் தவான் (துணை கேப்டன்), கேஎல் ராகுல், அம்பத்தி ராயுடு, மனிஷ் பாண்டே, கேதார் ஜாதவ், தோனி (விக்கெட் கீப்பர்), தினேஷ் கார்த்திக், ஹர்திக் பண்டியா, குல்தீப் யாதவ், யஸ்வேந்திரா சாஹல், அக்சர் பட்டேல், புவனேஸ்வர் குமார், ஜஸ்ப்ரிட் பும்ரா, ஷர்துல் தாக்கூர், காலீல் அஹ்மத்.