விறுவிறுப்பாக பேட்மிண்டன் விளையாடிய இன்ஸ்பெக்டர்.! சுருண்டு விழுந்து உயிர் பிரிந்த அதிர்ச்சி! பதைபதைக்க வைக்கும் வீடியோ.!



inspectoe-died-while-playing-badminton

ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் கணபாவரம் காவல் நிலைய ஆய்வாளராக இருந்தவர் பகவான்பிரசாத். இவர் தனது நண்பர்களுடன் நேற்றுமுன்தினம் வழக்கம்போல் இறகு பந்து விளையாடி கொண்டுருந்தார். அப்போது திடீரென மயங்கி உடல் சரிந்து கீழே விழுந்தார். 

இதனையடுத்து உடன் விளையாடிய அவரது நண்பர்கள் உடனடியாக  பகவான்பிரசாத்தை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பகவான் பிரசாத் விளையாடி கொண்டே சரிந்து விழுந்து இறந்த காட்சிகள் சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகியுள்ளன. 

பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருந்த நேரத்தில் பகவான் பிரசாத்திற்கு திடீரென ஏற்பட்ட மாரடைப்பு தான் அவரது மரணத்திற்குக் காரணம் எனத் தெரிவித்தனர். பேட்மிண்டன் விளையாடிக் கொண்டிருக்கும் போதே மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்த காவல்துறை ஆய்வாளரின் வீடியோ காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.