#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொல்கத்தாவை கதிகலங்க வைத்த பாண்டியாவின் நேற்றைய சாதனை என்ன தெரியுமா?
ஐபிஎல் 12வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடப்புச் சாம்பியனான சென்னை மற்றும் டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மற்ற அணிகள் தகுதி சுற்றுக்கு நுழைவதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த 47வது லீக் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 2 விக்கெடுக்கு 232 ரன்கள் குவித்தது.
அடுத்ததாக மும்பை அணிக்காக களம் இறங்கிய பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகி வெளியேறியதால் 20 ஓவர்களில் 198 ரன்கள் மட்டுமே சேர்த்து 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. அந்த அணியின் ஹர்திக் பாண்டியா மட்டும் அதிரடியாக ஆடி 34 பந்துகளில் 91 ரன்கள் குவித்தார். இதில் 9 சிக்ஸர்களும் 6 பவுண்டரிகளும் அடங்கும்.
இப்போட்டியில் பாண்டியா 17 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன் மூலம் இந்த சீசனில் மிகக் குறைந்த பந்தில் அரை சதம் கடந்தவர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்பு ரிஷப்பான்ட் 18 பந்துகளில் அரைசதம் கடந்ததே சாதனையாக இருந்தது.
மொத்தமாக ஐபிஎல் அரங்கில் குறைந்த பந்தில் அரைசதம் கடந்தவர் பட்டியலில் கேஎல் ராகுல் முதலிடம் வசிக்கிறார். அவர் 14 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். 15 பந்துகளில் அரை சதம் அடித்த யூசுப்பதான், சுனில் நரேன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
மேலும் இந்த சீசனில் மும்பை அணிக்கு எதிராக நேற்று கொல்கத்தா அணி அடித்த 232/2 ரன்களே அதிகபட்ச ரன்களாகும். இதற்கு முன்பு ஹைதராபாத் அணி பெங்களூரு அணிக்கு எதிராக அடித்த 231/2 ரன்களே அதிகபட்ச ரன்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.