மன்கட் சர்ச்சை: தனது புகைப்படத்தை கிழித்தெறிந்த பிரபல கிரிக்கெட் வீரருக்கு அஸ்வின் பதிலடி.!



ipl 2019 - manket wicket - ashwin - andersan

கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கப்பட்டு 11 சீசன் நிறைவடைந்த ஐபிஎல் தொடர் 12வது சீசன் தற்சமயம் நடைபெற்று வருகிறது. இத்தொடர் துவங்கிய காலத்திலிருந்தே இன்று வரை ரசிகர்கள் ஐபிஎல் போட்டிகளுக்கு பேராதரவு அளித்து வருகின்றனர். 

இந்நிலையில் ஜெய்ப்பூரில் நடந்த போட்டியில் ராஜஸ்தான் அணியும் பஞ்சாப் அணியும் மோதின. இப்போட்டியில் பந்துவீசும் போது பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின், பட்லரை மன்கெட் முறையில் அவுட்டாக்கி வெளியேற்றினார்.

இந்த முறையில் விக்கெட்டை வீழ்த்துவது கிரிக்கெட் விதிகளுக்கு உட்பட்டு இருந்தாலும், அது விளையாட்டு உணர்வுகளுக்கு எதிரானது என பல்வேறு தரப்பினரும் எதிர்ப்புகள் தெரிவித்தாலும் சிலர் ஆதரவும் அளித்தனர்.

அஸ்வினின் இந்த செயலுக்கு  தனது எதிர்ப்புகளை தெரிவித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சன் அஸ்வினின் புகைப்படத்தை சுக்குநூறாக கிழித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகியது.

IPL 2019

இந்நிலையில் இதற்கு பதில் அளித்துள்ள அஷ்வின் கூறுகையில், ‘இன்று நான் செய்தது ஆண்டர்சனுக்கு தவறாக தெரியலாம், ஆனால் நாளை அதே (மன்கடிங்) முறையில் அவரே விக்கெட் வீழ்த்தலாம். யாருக்கு தெரியும்? விதிகளில் இடம் இருக்கும் போது இது சரியா? தவறா? என்ற விவாதம் அவசியமில்லை என நினைக்கிறேன்’ என்றார்.