சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
நடுவரிடம் கோபத்தை காட்டிய டான் ரோஹித்துக்கு ஆப்பு வைத்த நிர்வாகம்.!
ஐபிஎல் 12வது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நடப்புச் சாம்பியனான சென்னை மற்றும் டெல்லி அணிகள் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விட்டன. மற்ற அணிகள் தகுதி சுற்றுக்கு நுழைவதற்கு கடுமையான முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. இதனால் நடக்கும் ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் சென்று கொண்டிருக்கிறது.
இந்நிலையில் கொல்கத்தாவில் நடந்த 47வது லீக் போட்டியில் மும்பை, கொல்கத்தா அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவரில் 2 விக்கெடுக்கு 232 ரன்கள் குவித்தது. அதிரடியில் மிரட்டிய அந்த அணியின் ஆண்ரே ரசல் அதிகபட்சமாக 40 பந்தில் 6 பவுண்டரி, 8 சிக்சர்கள் என 80 ரன்கள் குவித்தார்.
அடுத்து இமாலய இலக்கை துரத்த வந்தது மும்பை. அந்த அணியின் துவக்க வீரர் டி காக் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். அடுத்து ரோஹித் 12, ஈவான் லீவிஸ் 15, சூர்யகுமார் 26, பொல்லார்டு 20 ரன்களில் வெளியேறி ஏமாற்றம் அளித்தனர்.இதனால் மும்பை அணி கொல்கத்தா அணியிடம் 34 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
இதில் கொல்கத்தா வீரர் குர்வே பந்தில் 12 ரன்கள் எடுத்த போது ரோகித் சர்மா எல்பிடபிள்யு முறையில் அவுட்டானார். ஆனால் இதை உடனடியாக ரோகித் சர்மா ரிவியூ செய்தார். அதனை சோதனை செய்த மூன்றாவது நடுவர், பந்து ஸ்டெம்பில் படுவதை உறுதி செய்தார். இதனால் விரக்தியான ரோகித் சர்மா பெவிலியன் திரும்பிய போது, அவுட் கொடுத்த நடுவரை பார்த்து கோபமாக முனுமுனுத்த தோடு, ஸ்டெம்ப்பை பேட்டால் தட்டினார்.
இதையடுத்து ஐபிஎல்., நடத்தை விதி லெவன் 1யை மீறிய மும்பை கேப்டன் ரோகித் சர்மாவுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 15 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.