மீண்டும் சர்ச்சையில் அஸ்வின்; ஒரே ஓவரில் 7 பந்துகளை வீசிய கொடுமை.!



ipl-2019---mumbai-indians-vs-kings-leven-banjab---one-o

ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் பட்லரின் சர்ச்சை விக்கெட் மற்றும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் விதிகளுக்கு உட்பட்டு பீல்டர்களை நிறுத்தாததால் ஏற்பட்டதன் விளைவுகளை தொடர்ந்து தற்போது ஒரே ஓவரில் 7 பந்துகளை வீசி உள்ளார் அஸ்வின்.

ஐபிஎல் 12 வது சீசன் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் இன்றைய போட்டி மும்பை இந்தியன்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு இடையில் நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வின் செய்த அஸ்வின் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார்.

IPL 2019

அதனைத் தொடர்ந்து மும்பை அணிக்கு துவக்க வீரர்களாக ரோகித் சர்மா, டீகாக் இருவரும் களம் இறங்கினார்கள். இதில் முதல் ஓவரையே வீச வந்த அஸ்வின் தொடர்ச்சியாக ஏழு பந்துகளை வீசியுள்ளார். இதில் என்ன ஒரு கொடுமை  என்றால் அந்த 7 வது பந்தில் தான் முதல் பவுண்டரி அடிக்கப்பட்டுள்ளது.



 

இதில் அஸ்வினை விட அதிகமாக சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது போட்டியின் நடுவர்கள் தான் ஏனெனில் ஓவர்களுக்கு எத்தனை பந்துகள் வீசப்படுகிறது என்பதை அவர்கள் தான் கவனிக்க வேண்டும். மேலும் மும்பை அணியின் இரு மட்டையாளர்களும் கூட இதனை கவனிக்கவில்லை.

இதனை கவனித்த ரசிகர்கள் உடனடியாக இந்த தகவலை சமூகவலைதளங்களில் பதிவிட்டு போட்டியின் நடுவர்களை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.