#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தொடர் தோல்வியால் சோதனையில் முடிந்த விராட் கோலியின் புதிய சாதனை; என்ன தெரியுமா?
கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இதுவரை 11 சீசன் நிறைவுற்ற ஐபிஎல் தொடரின் 12 வது சீசன் தற்போது நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் நடைபெற்று வருகிறது. இதனால் நடைபெறும் அனைத்து போட்டிகளையும் காண ரசிகர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
இந்நிலையில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி தான் விளையாடிய மூன்று போட்டிகளிலுமே தோல்வியை தழுவியுள்ளது. கடந்த 11 ஆவது லீக்கில் ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடும்போது அந்த அணி வீரர்கள் இருவரும் சதம் அடித்து புதிய சாதனை படைத்தனர்.
இப்போட்டியில் பெங்களூரு அணி 118 ரன்கள் வித்தியாசத்தில் மிக மோசமான தோல்வியைத் தழுவியது. திறமையான வீரர்களை உள்ளடக்கிய பெங்களூரு அணியின் தோல்வி தொடர்ந்து வருவதால் அந்த அணியின் ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்தனர்.
நேற்று ராஜஸ்தான் அணிக்கு எதிரான தனது 4வது போட்டி ஐபிஎல் தொடரில் 14வது லீக் போட்டியாக அமைந்தது பெங்களூரு அணிக்கு. தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் நேற்றும் தோல்வியுற்றது.
முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் முன்னணி வீரர்கள் ராஜஸ்தான் சுழற் பந்துவீச்சாளர் ஷ்ரேயாஸ் கோபாலின் சுழலில் சிக்கி வீழ்த்தனர். அதன் பிறகு பார்திவ் பட்டேலின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி கௌரவமான ஸ்கோரை எட்டியது.
159 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. பெங்களூர் அணி வெற்றி பெற வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு சிறப்பாக பந்து வீசியது. இருந்தாலும் அந்த அணியின் மோசமான தடுப்பு பணிகள் காரணமாக கேட்ச்களையும் ரன் அவுட்களையும் கோட்டை விட்டனர். இதனால் அந்த அணி வெற்றி வாய்ப்பை இழந்து தோல்வியை தழுவியது.
Skipper @imVkohli is all set to play his 100th game as @RCBTweets Captain 💪💪 pic.twitter.com/Yp1EzD8oNW
— IndianPremierLeague (@IPL) April 2, 2019
இந்நிலையில் நேற்றைய போட்டியில் பெங்களூரு அணிக்கு கேப்டனாக களமிறங்கிய கோலி, ஐபிஎல்., அரங்கில் கேப்டனாக 100 போட்டியில் களமிறங்கிய மூன்றாவது கேப்டன் என்ற பெருமை பெற்றார்.
முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, கவுதம் காம்பிர் ஆகியோர் இம்மைல்கல்லை எட்டியுள்ளனர்.