#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இந்த மூன்று இந்திய வீரர்களை எப்படியாவது ஏலத்தில் தட்டி தூக்கணும்..! போட்டி போடும் அணிகள்.! என்ன காரணம்.?
15வது ஐபிஎல் போட்டிகளில் முக்கிய மூன்று இந்திய வீரர்கள் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் அடுத்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில், அகமதாபாத் மற்றும் லக்னோ என இரண்டு புதிய அணிகள் களமிறங்குகின்றன.
ஐபிஎல்லின் அனைத்து 10 அணிகளும் இந்த ஏலத்தில் பங்கேற்று வலுவான வீரர்களை ஏலத்தில் எடுக்க காத்திருக்கின்றனர். பஞ்சாப் கிங்ஸ் அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் ஏலத்தில் பங்கேற்க விரும்புகிறேன் என தெரிவித்துவிட்டதால், அந்த அணி அவரை அணியில் தக்கவைக்கவில்லை. எனவே லக்னோ அணி கேஎல் ராகுலை கேப்டனாக்க விரும்புவதாகவும், அவருடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.
இந்தநிலையில், பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கேஎல் ராகுல் இந்த ஏலத்தில் அதிக விலை கொடுத்து வாங்கப்படும் வீரராக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அகமதாபாத் மற்றும் லக்னோ ஆகிய இரண்டு புதிய அணிகளும் அறிமுக அணி என்பதால் இரு அணிகளும் தங்களது அணிகளுக்கு கேப்டனை தேடி வருவதால், தற்போதைய வீரர்களில் ராகுலுக்கு அதிக வரவேற்பு உள்ளதாக கருதப்படுகிறது.
அதேபோல, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் டெல்லி அணியால் விடுவிக்கப்பட்ட காரணத்தால் மும்பை இந்தியன்ஸ் அணி, ஷ்ரேயாஸ் ஐயரை எடுக்க விரும்புவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல ஷிகர் தவானை டெல்லி அணி தக்கவைக்கவில்லை. இதனால் ஷிகர் தவானை வாங்க பல அணிகளுக்கு இடையே போட்டி உள்ளதாக கூறப்படுகிறது. எனவே 5வது ஐபிஎல் போட்டிகளில் கேஎல் ராகுல், ஷ்ரேயாஸ் ஐயர், ஷிகர் தவான் ஆகியோர் அதிக விலைக்கு ஏலம் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.