#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடுத்த சுற்றுக்கு தகுதி பெற ஒவ்வொரு அணிகளும் இன்னும் எத்தனை ஆட்டங்களில் வெல்ல வேண்டும்.? வெளியான புள்ளி பட்டியல்!!
கொரோனா காரணமாக தள்ளிவைக்கப்பட்ட ஐபிஎல் போட்டிகள் மீண்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்கியது. 2021 ஆம் ஐபிஎல் தொடரில் 32 ஆட்டங்கள் முடிந்து விட்டன. 32 ஆட்டங்களின் முடிவில் ஒவ்வொரு அணிக்கும் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்னமும் எத்தனை வெற்றிகள் தேவை என்பதை பார்ப்போம்.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
இதுவரை 8 போட்டிகளில் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 -ல் தோல்வியடைந்து , 6 போட்டிகளில் வெற்றியுடன் 12 புள்ளிகள் எடுத்து புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது . இதனால் அதன் நெட் ரன்ரேட் +1.223 ஆக உள்ளது.
டெல்லி கேப்பிடல்ஸ்:
தற்போது புள்ளி பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் டெல்லி அணி இதுவரை எட்டு போட்டிகளில் ஆறு போட்டிகளை வென்றுள்ளது. அதன் நெட் ரன்ரேட் +0.547 ஆக உள்ளது. இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றாலே டெல்லி அணியால் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
இதுவரை 8 போட்டிகள் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 3 போட்டிகளில் தோல்வியடைந்து, 5 போட்டிகளில் வெற்றிபெற்று 10 புள்ளிகள் எடுத்து புள்ளிப் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்த அணியின் நெட் ரன்ரேட் -0.706 ஆக உள்ளது. இந்த மீதமிருக்கும் போட்டிகளில் மூன்று ஆட்டங்களில் வென்றால் அடுத்த சுற்றுக்கு பெங்களூரு அணியால் தகுதி பெற முடியும்.
மும்பை இந்தியன்ஸ்:
மும்பை இந்தியன்ஸ் அணி இதுவரை 8 ஆட்டங்களில் ஆடி நான்கு போட்டிகளில் வென்று 8 புள்ளிகள் எடுத்துள்ளது. இந்த அணியின் நெட் ரன்ரேட் -0.071 ஆக உள்ளது. அடுத்த சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமானால் மீதமிருக்கும் 6 போட்டிகளில் நான்கு போட்டிகளில் மும்பை அணி வெல்ல வேண்டியது கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
இதுவரை 8 போட்டிகள் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி , 4 போட்டிகளில் தோல்வியடைந்து, 4 போட்டிகளில் வெற்றிபெற்று 8 புள்ளிகள் எடுத்து 5-வது இடத்திற்கு முன்னேறியது. இந்த அணியின் நெட் ரன்ரேட் -0.154 ஆக உள்ளது. ராஜஸ்தான் அணியின் அடுத்து வரும் போட்டிகளில் நான்கு இடங்களில் வெள்ள வேண்டியது கட்டாயம் என்ற சூழ்நிலை உள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 ஆட்டங்களில் மட்டுமே வென்றுள்ளது 5 ஆட்டங்களில் தோல்வியடைந்து 6 புள்ளிகள் எடுத்துள்ளது. கொல்கத்தா அணி இனி ஆடும் அனைத்து ஆட்டங்களிலும் பெற்றால் மட்டுமே இந்த அணியால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும். இந்த அணியின் நெட் ரன்ரேட் +0.110 ஆக உள்ளது.
பஞ்சாப் கிங்ஸ்:
பஞ்சாப் கிங்ஸ் அணி இதுவரை ஆடிய 9 போட்டிகளில் 6 தோல்வி, 3 வெற்றியுடன் 6 புள்ளிகள் எடுத்துள்ளது. இந்த அணியின் நெட் ரன்ரேட் -0.345 ஆக உள்ளது. பஞ்சாப் அணி ஆடும் அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியும் என்ற சூழ்நிலை உள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
சன்ரைசர்ஸ் அணி இதுவரை ஆடிய 8 ஆட்டங்களில் 1 போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளதால் கிட்டத்தட்ட சன்ரைசர்ஸ் அணியின் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு முடிவுக்கு வந்து விட்டதாகவே தெரிகிறது. ஆனாலும் இந்த அணி இனிமேல் ஆடும் எல்லா ஆட்டங்களிலும் வெற்றி பெற்று மற்ற அணிகள் ஹைதராபாத் அணிக்கு சாதகமாக ஆடினால் இந்த அணியும் அடுத்த சுற்றுக்கு செல்ல ஓரளவிற்கு வாய்ப்பு உள்ளது. இந்த அணியின் நெட் ரன்ரேட் -0.623 ஆக உள்ளது.