#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடுத்த ஐபில் சீசனில் மேலும் ஒரு அணி.. 9 வது அணியை வாங்கும் அந்த சூப்பர் ஸ்டார் நடிகர் யார் தெரியுமா?
அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபில் போட்டியில் கொடுத்தாக ஒரு அணி இடம் பெறலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஐபில் 13 வது சீசன் T20 போட்டிகள் அண்மையில் நடந்து முடிந்தது. இந்த சீசனில் நடப்பு சாம்பியான மும்பை அணி மீண்டும் கோப்பையை கைப்பற்றியது. இந்நிலையில் அடுத்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் முன்னேற்பாடுகளில் பிசிசிஐ கவனம் செலுத்தி வருகிறது.
இதுவரை ஐபில் போட்டிகளில் 8 அணிகள் மட்டுமே விளையாடிவரும் நிலையில் அடுத்த சீசனில் கூடுதலாக ஒரு அணி இடம் பெறலாம் எனவும், அந்த அணி குஜராத்தின் அகமதாபாத்தை அடிப்படையாக கொண்ட அணியாக இருக்கலாம் எனவும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் அந்த 9 வது அணியை மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான மோகன்லால் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் மோகன்லாலுடன் இணைந்து இப்புதிய அணியை வாங்க பைஜூஸ் நிறுவனம் முயற்சித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரபூர்வ தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. அடுத்த சீசனில் 9 அணிகள் விளையாடும் பட்சத்தில் அது ரசிகர்களுக்கு மேலும் மகிழ்ச்சியான ஒன்றாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.