அரையிறுதிக்குள் பாக்கிஸ்தான் நுழைவது சாத்தியமா! அதிர்ச்சியளிக்கும் புள்ளிவிவரம்



Is it possible for pakistan to enter semifinal

இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடைபெற்று வரும் உலககோப்பை தொடரில் கலந்துகொண்ட 10 அணிகளில் இதுவரை 3 அணிகள் அரையிறுதிக்குள் முன்னேறிவிட்டன. நான்காவது அணி நியூசிலாந்தா, பாக்கிஸ்தானா என்பது இன்னும் உறுதியாகவில்லை.

2019 உலகக்கோப்பை தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. 10 அணிகளில் ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் தற்போதைக்கு புள்ளிப்பட்டியலில் முதல் 3 இடங்களை பிடித்து அரையிறுதிக்குள் முன்னேறிவிட்டன. நியூசிலாந்து அணி 11 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

wc2019

ஆனால் அதே 11 புள்ளியை பெரும் வாய்ப்பு இன்னும் ஒரு போட்டியில் ஆட வேண்டிய பாக்கிஸ்தான் அணிக்கு உள்ளது. பாக்கிஸ்தான் அணி அந்த போட்டியில் பங்களாதேசை வீழ்த்தினால் 11 புள்ளிகளுடன் நியூசிலாந்திற்கு இணையான புள்ளியை பெற்றுவிடும். இந்த சூழ்நிலையில் நெட் ரன்ரேட் அதிகம் கொண்டுள்ள அணி அரையிறுதிக்கு முன்னேறும்.

தற்போதைய நிலவரப்படி நியூசிலாந்தின் நெட் ரன்ரேட் +0.175. பாக்கிஸ்தானின் நெட் ரன்ரேட் -0.792. பாக்கிஸ்தான் அணி நியூசிலாந்தின் நெட் ரன்ரேட்டை விட அதிகமாக பெற பங்களாதேஷுடன் முதலில் பேட்டிங் செய்து இமாலய இலக்கை நிர்ணயித்து 300 ரன்களுக்கு மேலான வித்தியாசத்தில் வெற்றிபெற வேண்டும்.

wc2019

அதாவது, இதவரை சர்வதேச ஒருநாள் போட்டிகளில் எந்த ஒரு அணியும் வெற்றிபெறாத அளவிற்கு 300 ரன்களுக்கு மேலான ரன் வித்தியாசத்தில் பாக்கிஸ்தான் வெற்றிபெற வேண்டும். ஒருவேளை பங்களாதேஷ் முதலில் பேட்டிங் செய்து ஒரு ரன் எடுத்தாலே பாக்கிஸ்தான் அரையிறுதி வாய்ப்பை இழந்துவிடும்.