#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
'தோனி சொன்னதைத்தான் செய்தேன்' அதனாலதா தான் இந்த நிலைமையோ..? இஷாந்த் சர்மா ஓபன் டாக்.!
கடந்த 4 , 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய அணியில் அவரது இடத்தை இஷாந்த் சர்மா உறுதி செய்திருந்தார். அஸ்வின், ஜடேஜாவின் சுழற்பந்து கூட்டணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக இடம்பெற்றிருந்தார். ஆனால் புவனேஷ் குமார், முகமது சாமி, பும்ரா போன்ற பந்து வீச்சாளர்களின் வருகையால் அணியில் சர்மாவுக்கு இடம் கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.
அதேவேளையில் ஒருநாள் போட்டிகளை விட அதிகமான டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடி உள்ளார். இதுவரை 97 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இஷாந்த் சர்மா 297 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இந்நிலையில் அதிகமான டெஸ்ட் போட்டிகளில் விளையாடி குறைவான விக்கெட்டுகளையே வீழ்த்தியுள்ளார் என்ற விமர்சனமும் எழுந்தது.
இணைய நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், புள்ளி விவரங்களை வைத்து தன்னுடைய திறமையை எடைபோட்டதில்லை என்றும் கேப்டன் மகேந்திரசிங் தோனி களத்தில் என்ன செய்யச் சொன்னாரோ அதைத்தான் செய்தேன் என்றும் கூறியுள்ளார். டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்தவில்லை என்றாலும், தோனி என்னைத் தொடர்ந்து அணிக்குள் சேர்த்துக் கொண்டிருந்ததற்கு இதுதான் காரணம் என்று தெரிவித்தார்.
இந்தியாவுக்காக விளையாடும்போது, தோனி என்னிடம் வந்து, 20 ஓவர்கள் வீசி 40 ரன்களை மட்டும் விட்டுத்தர வேண்டும், நீங்கள் நெருக்கடியை உருவாக்கினால், விக்கெட்களை சுழற்பந்து வீச்சாளர்கள் வீழ்த்திவிடுவார்கள் என்று கேட்டுக்கொண்டது போல் நான் செயல்பட்டேன்” என்று தெரிவித்தார்.