#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
சிட்னியில் சதம் அடித்த ஸ்மித்.! சட்னியாக்கிய ஜடேஜாவின் ரன் அவுட்.! வைரல் வீடியோ.!
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி சிட்னி மைதானத்தில் நேற்று நடைபெற்றது. நேற்றைய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் டிம் பெய்ன் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
நேற்றைய ஆட்டம் மழையால் பாதியில் பாதிப்படைந்தது. இதனால் சிறிது நேரம் போட்டி ஒத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து மழை நின்று மீண்டும் போட்டி தொடர்ந்தது. இதனையடுத்து முதல் நாள் ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 166 ரன்களை ஆஸ்திரேலிய அணி எடுத்திருந்தது. இந்தநிலையில், இன்று 2வது ஆட்டம் தொடங்கியது.
105.4 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிரடி காட்டிய ஸ்மித் அதிகபட்சமாக 131 ரன்கள் குவித்தார். சதம் அடித்து சிறப்பாக ஆடி வந்த ஸ்மித்தை ரவீந்திர ஜடேஜா தன்னுடைய துல்லியமான த்ரோ மூலம் ரன் அவுட் ஆக்கினார். அந்த வீடியோவை இந்திய ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.
#RavindraJadeja
— Shashidhar Dursety (@Dursety) January 8, 2021
The Best fielder by far in World cricket 🙏#Rockstar 😉#IndVsAus pic.twitter.com/FN10HBm6AH
ஸ்மித் வெளியேறியவுடன், ஆஸ்திரேலியா அணி 338 ஓட்டங்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணி சார்பில் ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சைனி மற்றும் பும்ரா தலா 2 விக்கெட்டுகளும், சிராஜ் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். இதனையடுத்து இந்திய அணி பேட்டிங் செய்ய தொடங்கியுள்ளது.
இந்திய அணியின் துவக்க வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா 77 பந்துகளுக்கு 26 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். சிறப்பாக ஆடிய கில் 101 பந்துகளில் 50 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். புஜாரா 9 ரன்களுடனும், ரஹானே 5 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.