குஷ்புவிடம் வாய்ப்பு கேட்ட ஹீரோ.. செருப்பால அடிப்பேன் என திட்டிய நடிகை.!
மலிங்கா கர்ப்பமாக உள்ளாரா? பதிலடி கொடுத்த முன்னாள் வீரர்!
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்காவின் உடலை கிண்டல் செய்யும் விதமாக புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலான நிலையில், அதற்கு அந்தணியின் முன்னாள் வீரர் ஜெயவர்த்தனே பதிலடி கொடுத்துள்ளார்.
தற்போது இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தொடரில் கொஞ்சம் தடுமாறும் அணிகளின் வரிசையில் இலங்கை அணி இருந்துவந்தது. இந்தநிலையில் இங்கிலாந்து அணிக்கெதிரான நேற்றைய ஆட்டத்தில் இலங்கை அணி 232 ஓட்டங்கள் எடுத்தது. இங்கிலாந்தை 212 ஓட்டங்களுக்குள் சுருட்டி அபாரமாக வெற்றிபெற்று புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்திலும் உள்ளது.
இந்நிலையில் போட்டி துவங்குவதற்கு முன்பு இலங்கை அணியின் பந்துவீச்சாளர் மலிங்காவின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளங்களில் வைரலானது, அதில் மலிங்காவின் உடல் எடை அதிகரித்துவிட்டதாகவும், அவர் வயிற்றைப் பார்த்தால் கர்ப்பமாக இருப்பது போல் தெரிவதாகவும் கிண்டல் செய்து வந்தனர்.
இந்நிலையில் இலங்கை அணியின் முன்னாள் வீரரான ஜெயவர்த்தனா மலிங்காவை கிண்டல் செய்யும் விதமாக வெளியிடப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டு வந்தீர்கள், ஆனால் அதை எல்லாம் தாண்டி மலிங்கா சாதித்து நேற்றைய வெற்றிக்கு முக்கிய காரணமானார். மேலும் புத்தகத்தின் உள்ளே இருப்பதை தான் பார்க்க வேண்டும்! புத்தகத்தின் கவரை பார்க்க கூடாது என்று பதிலடி கொடுத்துள்ளார்.