#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இலங்கை அதிரடி மட்டையாளருக்கு பயமூட்டும் இந்திய அணியின் பந்து வீச்சாளர் யார் தெரியுமா?
கடந்த 2015 வரை இலங்கை அணிக்காக ஆடியவர் ஜெயவர்த்தனே, அதிரடி மட்டையாளரான ஜெயவர்தனே, டெஸ்ட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை குவித்த வீரர்கள் பட்டியலில் முதல் 10 இடங்களுக்குள் இருக்கிறார்.
ஜெயவர்த்தனே ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தலைமை பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர்.
இந்தநிலையில் ஜெயவர்த்தனேயிடம், இந்தக்காலத்தில் இருக்கும் பந்து வீச்சாளர்களில் யார் உங்களுக்கு நெருக்கடி கொடுப்பார்? என்று கேள்வி எகேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த ஜெயவர்த்தனே, சற்றும் யோசிக்காமல் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பும்ராவின் பந்து வீச்சை எதிர்கொள்வது மிகவும் கடினம் என கூறியுள்ளார்.
கடைசி ஓவர்களில் எத்தனை அழுத்தமான நேரங்களிலும் எந்த சலனமும் இல்லாமல் பும்ரா பந்து வீசுகிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் மலிங்கா தான். இதை பும்ராவே பேட்டிகளில் குறிப்பிட்டு இருக்கிறார்.