#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
என்ன பாத்தா உங்களுக்கு அப்டியா தெரியுது..? செய்தியாளர் கூறியதை கேட்டு ரோஹித் ஷர்மா கொடுத்த ரியாக்சனை பாருங்க..
ரோஹித் ஷர்மாவை செய்தியாளர் ஒருவர் விராட் என கூப்பிட, அதற்கு ரோஹித் ஷர்மா கொடுத்த ரியாக்சன் ஒன்று வைரலாகிவருகிறது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி தற்போது நடைபெற்றுவருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 336 ரன்கள் எடுத்துள்ளது. இதனை அடுத்து 337 என்ற இலக்குடன் இங்கிலாந்து அணி இன்னும் சிறிது நேரத்தில் களமிறங்க உள்ளது.
இந்திய அணி சார்பாக KL ராகுல் 108 , கேப்டன் விராட்கோலி 66 , ரிஷப் பண்ட் 77 ரன்கள் அடித்து அணியின் எண்ணிக்கையை உயர்த்தினர். தொடக்க வீரர்களாக இறங்கிய ரோஹித் ஷர்மா மற்றும் தவான் இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.
இந்நிலையில் இன்றைய போட்டிக்கு முன்பாக செய்தியாளர்களை சந்தித்த இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் ஷர்மா கொடுத்த ரியாக்சன் ஒன்று வீடியோவாக சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
செய்தியாளர்களை சந்தித்த ரோஹித் ஷர்மாவை செய்தியாளர் ஒருவர் தவறுதலாக ஹாய் விராட் என கூப்பிட, தனது பெயரை செய்தியாளர் தவறாக கூறியதை, சில நொடிகளுக்குப் பிறகு உணர்ந்து கொண்ட ரோஹித் ஷர்மா, தனது தொப்பியை நீக்கி, தனது முகத்தை பாருங்கள் என சிரித்துக்கொண்ட காட்டினார். இந்த காட்சி தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.
Journalist mistakenly said "Hi Virat" to Rohit
— ADARSH (@Adarshdvn45) March 26, 2021
Rohit's Reaction : 🤣 pic.twitter.com/XUH5NtDDm9