"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
5 போட்டிகளிலும் ஓரங்கட்டபட்ட ரிஷப் பண்டிற்கு முன்னாள் கேப்டன் கபில்தேவ் அறிவுரை!
நியூசிலாந்திற்கு எதிரான 5 டி20 போட்டிகளிலையும் வென்று இந்தியா புதிய சாதனையை படைத்துள்ளது. இந்த தொடர் வெற்றிக்கு இந்திய அணியின் அனைத்து வீரர்களும் சரிசமத்துடன் போராடினர்.
ஆனால் வேதனையான விஷயம் என்னவெனில் இந்த தொடருக்கு தேர்வான 15 பேரில் 14 வீரர்கள் ஒரு போட்டியிலாவது களமிறங்கினர். ஆனால் ரிஷப் பண்டிற்கு மட்டும் ஒரு போட்டியில் கூட வாய்ப்பு வழங்கப்படவில்லை.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக இரண்டாவது போட்டியில் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பிங்கை செய்ய துவங்கினார். அதன் பிறகு பண்ட் உடல்நிலை சரியான நிலையிலும் மூன்றாவது ஒருநாள் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான 5 ஆவது டி20 போட்டிகளிலும் கே.எல்.ராகுலே விக்கெட் கீப்பிங்கை தொடர்ந்தார்.
இதனால் ரிஷப் பண்டின் தேவை குறையத் துவங்கியது. அதோடுமட்டுமல்லாமல் இரண்டாவது கீப்பிங் வாய்ப்பாக சஞ்சு சாம்சனும் அணியில் சேர்க்கப்பட்டதால் ரிஷப் பண்டின் வாய்ப்பு முற்றிலும் குறைந்தது. இருப்பினும் அனைவருக்கும் வாய்ப்பு கொடுத்துவிட்டு ரிஷப் பண்டிற்கு வாய்ப்பு அளிக்காதது பலருக்கு வேதனையை கொடுத்துள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், "பண்டிற்கு நிச்சயம் வாய்ப்பு கிடைக்கும். அப்போது அந்த வாய்ப்பினை அவர் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். பண்ட் மணமுடைந்துவிடாமல் கிடைக்கும் வாய்ப்பினை பயன்படுத்தி தனது திறமையை அனைவருக்கும் நிரூபிக்க வேண்டும்" என அறிவுறை வழங்கியுள்ளார்.