சாதனை மேல் சாதனை! 25வது சதத்தில் கோலி நிகழ்த்திய சாதனை என்ன தெரியுமா?



kholi beats sachin in fastest 25th century

தொடர்ந்து சாதனைகளை படைத்து வரும் இந்திய அணியின் கேப்டன் கோலி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்ததன் மூலம் புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 326 ரன்கள் குவித்தது. பின்னர் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் 283 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

ஆஸ்திரேலியா அணியின் மிரட்டலான பந்து வீச்சை சிறப்பாக எதிர்கொண்ட இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 25 ஆவது சதத்தை பூர்த்தி செய்தார். 257 பந்துகளை சந்தித்த விராட் கோலி 13 பவுண்டரி மற்றும் சிக்சருடன் 123 ரன்கள் குவித்தார்.

kholi 25th century

இது கோலி சர்வதேச அளவில் ஆடிய 127 வது டெஸ்ட் இன்னிங்ஸ் ஆகும். இந்த இன்னிங்சில் சதம் அடித்ததன் மூலம் விராட் கோலி மிகக் குறைந்த இன்னிங்சில் 25 சதம் அடித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். முதலிடத்தில் யாருமே விழித்த முடியாத அளவில் ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஜாம்பவான் டான் பிராட்மேன் 68 இன்னிங்சில் 25 டெஸ்ட் சதங்களை அடித்துள்ளார். 130 இன்னிங்சில் 25 சதம் அடித்த சச்சின் டெண்டுல்கர் மூன்றாவது இடத்தில் உள்ளார்.