#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பொழந்து கட்டிய ராகுல்.. கோட்டைவிட்ட கோலி.. பெங்களூரு அணிக்கு இமாலய இலக்கு!
துபாயில் இன்று நடைபெற்று வரும் ஐபிஎல் 2020 தொடரின் ஆறாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு 207 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
துவக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பஞ்சாப் அணியின் கேப்டன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அதிரடியாக விளையாடி 132 ரன்கள் குவித்தார். இந்த ஐபிஎல் தொடரில் முதல் சதத்தினை கேஎல் ராகுல் பதிவு செய்தார்.
69 பந்துகளை சந்தித்த ராகுல் 7 சிக்சர் மற்றும் 14 பவுண்டரிகளை விளாசினார். எதிரணியின் கேப்டன் விராட் கோலியின் பீல்டிங் ராகுலின் அதிரடிக்கு எதிர்மறையாக அமைந்துவிட்டது.
ஸ்டெயின் வீசிய ஆட்டத்தின் 17 ஆவது ஓவரில் ராகுல் கொடுத்த கேட்சை விராட் கோலி கோட்டைவிட்டார். மேலும் சைனி வீசிய அடுத்த ஓவரிலும் ராகுல் கொடுத்த கேட்சை கோலி கோட்டைவிட்டார். இதன் பிறகு ராகுல் 42 ரன்கள் விளாசினார்.