#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இலங்கை வீரர் மலிங்காவின் அழகான மனைவியை பாத்துருக்கீங்களா? புகைப்படம் இதோ!
இலங்கை அணியின் முக்கியமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் லசித் மலிங்கா. 1983 ஆகஸ்ட் 28ஆம் தேதி பிறந்த லசித் மலிங்கா இலங்கை அணிக்காக கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து விளையாடி வருகிறார்.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஜூலை 1 2004 ஆம் ஆண்டு மலிங்கா விளையாடினார். தனது முதல் போட்டியிலேயே 6 விக்கெட்டுகளை கைப்பற்றி இலங்கை அணி உட்பட எதிர் அணியான ஆஸ்திரேலிய அணி வீரர்களின் பாராட்டையும் பெற்றார் லசித் மலிங்கா.
அதன்பிறகு ஒருநாள் போட்டி, டெஸ்ட் தொடர், T20 என பல்வேறு தொடர்களில் தனது அசுர வேக பந்து வீச்சினால் பல்வேறு விக்கெட்டுகளை கைபற்றி பல்வேறு சாதனைகளையும் படைத்துள்ளார் லசித் மலிங்க. இந்நிலையில் டெஸ்ட் தொடரில் இருந்து ஏற்கனவே தனது ஓய்வினை அறிவித்திருந்த லசித் மலிங்க சமீபத்தில் வங்கதேச அணியுடனான ஒருநாள் போட்டிக்கு பிறகு ஒருநாள் போட்டியில் இருந்து தனது ஓய்வை அறிவித்துள்ளார்.
இவரது குடும்ப வாழ்க்கையை பார்த்தோமேயானால் கடந்த 2010ஆம் ஆண்டு தன்யா பெரேரா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார் லசித் மலிங்கா. இதுவரை பெரிதாக வெளிவராத இவரது புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அவரது புகைப்படம்.