IPL FINAL 2023 : மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம்..!! இனி என்னென்ன முடிவுகள் கிடைக்கும்..?!!
ஐ.பி.எல் 2023 இறுதிப் போட்டியில் மழையால் போட்டி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் இனி என்ன நடக்கு என்பது குறித்து காண்போம்.
ஐ.பி.எல் 2023 தொடரை கைப்பற்றி சாம்பியன் பட்டத்தை வெல்லப் போவது யார் என்பதை நிர்ணயிக்கும் பிரம்மாண்ட இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்-குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெற இருந்த இந்த போட்டி தற்போது வரை பெய்துவரும் மழையால், போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்படுள்ளது.
இந்த செய்தியை நாம் எழுதிக்கொண்டிருந்த 8.01 மணிவரை மழை பெய்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த மழை இன்னும் அரை மணி நேரத்தில் நின்றால், 9 மணிக்கு போட்டி தொடங்க வாய்ப்புள்ளது. போட்டியை இரவு 11.26 மணிக்குள் முடிக்க வேண்டும் என்ற விதியின் காரணமாக, இந்த போட்டி 10 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தப்பட வாய்ப்புள்ளது.
சுமார் 10.30 மணிவரை மழை தொடர்ந்தால், இந்த போட்டியை 5 ஓவர்கள் கொண்ட போட்டியாக நடத்தவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை மழை நிற்காவிட்டால், ரிசர்வ் நாளான நாளை 29 ஆம் தேதி இந்த போட்டி மீண்டும் நடைபெறும். நாளையும் மழையின் காரணமாக இந்த போட்டியை நடத்துவதில் தடை எற்பட்டால் சென்னை ரசிகர்களின் இதயம் சுக்குநூறாக உடையும்.
ஏனெனில், விதிப்படி லீக் சுற்றின் முடிவில் அதிக வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதலிடம் பிடித்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். லீக் சுற்றின் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் 10 வெற்றி 4 தோல்விகளுடன் 20 புள்ளிகள் பெற்று முதலிடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது. நாளையும் போட்டி நடக்காவிட்டால் கோப்பை மீண்டும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் வசமாகும் என்பதில் சந்தேகமில்லை.