#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
இங்கிலாந்தை அலறவிடும் மலிங்கா! பரபரப்பான ஆட்டத்தில் வெற்றி யாருக்கு?
ஐசிசி உலகக் கோப்பை தொடரில் 27வது ஆட்டத்தில் இன்று இங்கிலாந்து மற்றும் இலங்கை அணிகள் மோதுகின்றன இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 232 ரன்கள் எடுத்தது.
இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் முதல் மூன்று ஓவர்களிலேயே ஆட்டமிழந்தனர். அதன்பின்பு களமிறங்கிய பெர்னான்டோ, மென்டிஸ், மேத்யூஸ் நிதானமாக ஆட இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 232 ரன்கள் எடுத்தது. மேத்யூஸ் அதிகபட்சமாக 85 ரன்கள் எடுத்தார்.
இந்த இலக்கை எளிதாக வென்று விடலாம் என களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு இரண்டாவது பந்திலேயே பெயர்ஸ்டோவின்(0) விக்கெட்டை மலிங்கா கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து ஏழாவது ஓவரில் மற்றொரு துவக்க ஆட்டக்காரர் வின்ஸ்(14) விக்கெட்டையும் கைப்பற்றினார் மலிங்கா.
பின்னர் ஆடத் துவங்கினர் ஜோ ரூட் மற்றும் இயான் மோர்கன். 19 ஆவது ஓவரில் மோர்கன்(21), உதானா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். பிறகு மீண்டும் பந்துவீச வந்த மலிங்கா 31 ஆவது ஓவரில் அரைசதம் அடித்த ஜோ ரூட்(57) விக்கெட்டையும் கைப்பற்றினார். பின்னர் 33 ஆவது ஓவரிலேயே அதிரடி ஆட்டக்காரர் பட்லர்(10) விக்கெட்டையும் சாய்த்தார் மலிங்கா.
33 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாறி வருகிறது. ஸ்டோக்ஸ் மற்றும் மொயின் அலி களத்தில் உள்ளனர்.