#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
#அதிர்ச்சி : MI ரசிகர்கள் தாக்கி, CSK ரசிகர் மரணம்.!
17 வது ஐபிஎல் சீசன் துவங்கி பல்வேறு நகரங்களில் வெகு விமரிசையாக நடந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இரண்டும் மோதியது. தோனியின் சிறப்பான செயல்பாடு தான் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகர்களை அதிக அளவில் ஈர்த்துள்ளது.
மற்ற அணிகளை காட்டிலும் சென்னை மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளின் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் பரம எதிரிகளை போல சமூக வலைதளங்களிலும் மற்ற இடங்களிலும் பேசிக் கொள்வதை நாம் காண முடியும். கிரிக்கெட் வெறும் விளையாட்டு தான் என்றாலும் அதை பலரும் தீவிரமான விஷயமாக எடுத்துக் கொள்கின்றனர். அப்படி தீவிரமாக எடுத்துக் கொண்டதன் விளைவாக இப்பொழுது ஒரு உயிர் போய்விட்டது.
ஓரிரு நாட்களுக்கு முன் நடந்த சன்ரைசஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இடையேயான போட்டியை காண மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில் ரசிகர்கள் ஒன்று கூடினர். அந்த நேரத்தில் ரோகித் சர்மா விக்கெட்டை இழந்ததை சென்னை அணி ரசிகரான பந்தோ பந்த் (வயது 66) என்பவர் கொண்டாடியுள்ளார். இதை பார்த்த மும்பை இந்தியன்ஸ் அணி ரசிகர்கள் அதிர்ச்சியும், ஆத்திரமும் அடைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அவர்கள் பந்தோபந்தை அதிரடியாக தாக்க ஆரம்பித்தனர். இதில் படுகாயமடைந்த அவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.