பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நான் ஓய்வு பெற போகிறேன்.! சீக்கிரம் வேறொருவரை உருவாக்குங்கள்.! இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த வீரர்.!
ஐபிஎல் தொடர் காரணமாக பல திறமை வாய்ந்த வீரர்களை, இந்தியா அடையாளம் கண்டு சிறப்பான வீரர்களை உருவாக்கி வருகிறது. அதன் காரணமாகவே இந்திய அணி டெஸ்ட், ஒருநாள், டி20 என மூன்று வித போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வருகிறது. சமீப ஆண்டுகளாக இந்திய அணிக்கு பல திறமை வாய்ந்த வீரர்கள் கிடைத்துள்ளனர்.
இந்தநிலையில், இந்திய அணிக்கு கிடைத்த ஒரு முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி. 2013ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான ஷமி தற்போது வரை தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தி வரும் இவர், இதுவரை இந்திய அணிக்காக 50 டெஸ்ட் போட்டி, 79 ஒருநாள் போட்டி மற்றும் 12 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
தனது சிறப்பான பந்து வீச்சின் மூலம் ஏகப்பட்ட ரசிகர்களை தன் வசம் கொண்டுள்ள இவர் தற்போது அளித்துள்ள ஒரு பேட்டியில் தான் விரைவில் ரிட்டயர்டு ஆகி விடுவேன் என்றும் அதனால் எனது இடத்திற்கு வேறு ஒரு மாற்று வீரரை தேர்வு செய்ய விரும்புகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், நான் பல வருடங்களாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வருகிறேன். எப்பொழுதெல்லாம் என்னிடம் இளம் வீரர்கள் வந்து ஆலோசனை கேட்கிறார்களோ அப்போதெல்லாம் எனக்குத் தெரிந்த அனைத்து விவரங்களையும் நான் சொல்லி விடுவேன்.
நான் எப்போது வேண்டுமானாலும் ஓய்வு பெற வாய்ப்பு உள்ளது. அதனால் எனது இடத்திற்கு விளையாடும் மற்றொருவரை உருவாக்க விரும்புகிறேன். இதற்காக இளம் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு தொடர்ச்சியாக ஆலோசனையும் வழங்கி வருகிறேன். எனது ஓய்வு அறிவிப்பை வெளியிடும் போது இந்திய அணிக்காக மாற்று வீரர் தயார் நிலையில் இருப்பார் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.