#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
தோனி எப்படி அவுட் ஆனார்? வெளியான வீடியோவால் கண்ணீர் விடும் ரசிகர்கள்!
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்றைக்கு முதல் நாள் தொடங்கி நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. நேற்றைய ஆட்டத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான தோனி, கடைசி வரை களத்தில் நின்று நியூசிலாந்து அணிக்கு பயத்தை ஏற்படுத்தி வந்தார். மேலும் இந்திய அணியை வெற்றிக்கு அருகில் கொண்டு சென்றார்.
WHAT A MOMENT OF BRILLIANCE!
— ICC (@ICC) 10 July 2019
Martin Guptill was 🔛🎯 to run out MS Dhoni and help send New Zealand to their second consecutive @cricketworldcup final! #CWC19 pic.twitter.com/i84pTIrYbk
சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் போது, ஆட்டத்தின் 48.2-வது பந்தை தோனி அடித்து ஆட முற்பட்டார். அப்போது இரண்டு ஓட்டங்கள் எடுக்க முயன்றார். ஆனால் கப்திலின் அற்புதமான துரோவால் தோனி ரன் அவுட் ஆனார். இந்தநிலையில் தோனி ரன் அவுட் ஆன வீடியோவை ஐசிசி வெளியிட்டுள்ளது.