#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
"தோனியின் எதிர்காலம் மிகவும் ரகசியமானது" பிசிசிஐ தேர்வுக்குழு தலைவர் பேட்டி!
இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வு குழு தலைவராக 2016 ஆம் ஆண்டு முதல் இருந்து வந்த எம்எஸ்கே பிரசாத்தின் பதவிக்காலம் தற்போது முடிவடைகிறது. அவரது இடத்தை நிரப்ப சுனில் ஜோஷி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து தனது 5 ஆண்டு கால அனுபவத்தினை பகிர்ந்துகொண்டுள்ள பிரசாத், "இந்த காலக்கட்டத்தில் தோனியின் தலைமையில் இருந்த இந்திய அணியினை கோலியின் தலைமையில் மாற்றியது ஒரு வெற்றிகரமான செயல். தலைமை மாற்றத்தால் அணியின் பலம் குறையாமல் பார்த்துகொண்டது மிகப்பெரிய செயல்.
மேலும் உலகக்கோப்பை அரையிறுதிக்கு பின்னர் தோனி மீது எழுந்த விமர்சனங்கள் குறித்து பேசிய அவர், "தோனி தனது எதிர்காலம் குறித்து மிகவும் தெளிவாக உள்ளார். அதனை என்னிடமும் அணி நிர்வாகத்திடம் கூறியுள்ளார்.
அது மிகவும் ரகசியமானது என்பதால் என்னால் வெளியில் கூற முடியாது. அந்த ரகசியங்கள் எப்போதும் எங்களால் காக்கப்படும்" என்று கூறியுள்ளார். மேலும் தோனியின் இடத்தை நிரப்ப தன்னுடைய குழு மிகவும் சிரமப்பட்டதாக தரிவித்துள்ளார்.