#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
7 பந்தில் 7 சிக்ஸர்; யுவராஜ் சிங்கையே தூக்கி சாப்பிட்ட இளைஞர்; 26 பந்தில் எத்தனை ரன்கள் தெரியுமா?
மும்பையில் சச்சின் டெண்டுல்கர் ஜிம்கானா மைதானத்தில் F டிவிஷன் டைம்ஸ் கோப்பை கிரிக்கெட் தொடர் நடந்தது. இதில் விவா சூப்பர் மார்கெட் அணியும் - மஹேந்திரா லாஜிஸ்டிக் அணியும் மோதின.
இதில் மகரந்த் பாடில், என்பவர் விவா சூப்பர்மார்கெட் அணிக்காக விளையாடியனார். அதில் தான் சந்தித்த ஒரு ஓவரில் 6 பந்திலும் சிக்ஸர் அடித்ததோடு, அடுத்த ஓவரிலும் சந்தித்த முதல் பந்தில் சிக்ஸர் அடித்து, 7 பந்தில் 7 சிக்ஸர்களை விளாசி அசத்தினார்.
இதில் என்னவொரு சிறப்பு என்றால் விவா அணிக்காக 8வது வீரராக களமிறங்கிய அவர், 7 பந்துகளில் 7 சிக்ஸர் உள்ளிட்ட மொத்தம் 26 பந்துகளில் 84 ரன்களை குவித்து அணி வெற்றி பெற பெரும் பங்கு வகித்தார்.
இதுகுறித்து மகரந்த் பாடில் கூறியபோது, “நான் இப்படி சிக்ஸர்கள் அடித்தது குறித்து மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதே சமயம் இதே போல் மீண்டும் செய்வேனா என தெரியவில்லை, அப்படி சிக்ஸர் அடிப்பதும் கடினம்.” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக 2007 டி20 உலகக் கோப்பை போட்டியின் போது யுவராஜ் சிங் இங்கிலாந்து அணிக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்திருந்தார்.