#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
13வது ஓவரிலேயே சென்னை அணியின் சோலியை முடித்த மும்பை இந்தியன்ஸ்!. தலையில் துண்டை போட்ட சிஎஸ்கே ரசிகர்கள்.!
துபாயில் நடைபெற்று வரும் 13வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் நேற்றைய 41வது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது. இந்த ஆட்டம் ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. ஷார்ஜா கிரிக்கெட் மைதானம் சிறிய மைதானம் என்பதால் பேட்ஸ்மேன்கள் அதிகப்படிய ரன்கள் குவிக்க ஏதுவான மைதானம். ஆனால் நேற்றைய ஆட்டத்தில் அந்த மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பயங்கரமாக சொதப்பியது.
நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். நேற்றைய ஆட்டத்தில் கேதர் ஜாதவ், ஷேன் வாட்சன், பிராவோ நீக்கப்பட்டு, அவர்களுக்கு பதிலாக ஜெகதீசன், ருதுராஜ் கெய்க்வாட், இம்ரான் தாஹிர் சேர்க்கப்பட்டனர். சென்னை அணியின் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெய்க்வா மற்றும் டுப்ளீசிஸ் களமிறங்கினர் மும்பை அணியின் முதல் ஓவரிலேய ட்ரெண்ட் பவுல்ட் வீசிய பந்தில் ருதுராஜ் கெய்க்வாட் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.
அடுத்ததாக பும்ரா வீசிய இரண்டாவது ஓவரில் ஜெகதீசன் ரன் ஏதும் எடுக்காமலும், அம்பத்தி ராயுடு 2 ரன்கள் எடுத்தநிலையிலும் அவுட் ஆகினர். அடுத்தடுத்து சென்னை அணி வீரர்கள் அவுட் ஆகி வெளியேறினர். சென்னை அணியில் அதிகபட்சமாக சாம் கரன் 47 பந்துகளை சந்தித்து 52 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். இறுதியில் சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை பறிகொடுத்து 114 ரன்கள் மட்டுமே குவித்தது.
இதனையடுத்து மும்பை அணி 115 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கியது. மும்பை அணியின் துவக்க வீரர்களாக டி காக் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினர். துவக்க வீரர்களாக களமிறங்கி இருவரும் மட்டுமே சென்னை அணியின் சோலியை முடித்தனர். டி காக் 37 பந்துகளில் 46 ரன்களும் இஷான் கிஷன் 37 பந்துகளில் 68 ரன்களும் எடுத்து 12.2 ஓவர்களில் 116 ரன்களை எடுத்து ஆட்டத்தை முடித்தனர். மும்பை இந்தியன்ஸ் அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.