#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பழிவாங்கியது நியூசிலாந்து அணி..! அபரா ஸ்கோர் அடித்தும் தோல்வியடைந்த இந்திய அணி..!
நியூசிலாந்து நாட்டிற்கு சுறுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 போட்டியை அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில், முதலில் பேட் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 347 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ஷ்ரேயஸ் ஐயர் 103 (107)ரன்களும், KL ராகுல் 88* (64) ரன்களும் எடுத்து அணியின் எண்ணிகையை உயர்த்தினர், இதனை அடுத்து 348 என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி வீரர்கள் அதிரடியாக விளையாடினர்.
நியூசிலாந்து அணி வீரர் நிகோலஸ் 78 (82) ரன்களும், லத்தம் 69 (48) ரன்களும் எடுக்க, கைடசி வரை அதிரடியாக விளையாடிய டைலர் 109* (84) ரன்களும் எடுத்தனர். இறுதியில் 48.1 ஓவர்கள் முடிவில், ஆறு விக்கெட்டுகளை மட்டும் இழந்து நியூசிலாந்து அணி 348 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
கடந்த 5 T20 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியை சந்தித்த நியூசிலாந்து அணி ஒருநாள் போட்டியில் இந்திய அணியை வெற்றிபெற்று பழிவாங்கியுள்ளது.