#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஒரே போட்டியில் 200 ரன் அடித்தும் சாதனை; 246 ரன்கள் கொடுத்தும் வேதனை.!
நியூசிலாந்து-வங்கதேச அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டியில் வில்லியம்சன் 200 ரன்கள் அடித்துள்ளார். அதேவேளையில் வங்கதேச பந்துவீச்சாளர் 246 ரன்கள் கொடுத்து மோசமான சாதனையையும் செய்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி அந்த அணிக்கு எதிராக மூன்று ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்நிலையில் ஒருநாள் போட்டி தொடரை நியூசிலாந்து அணி வென்ற நிலையில் தற்சமயம் முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, முதல் இன்னிங்ஸில் தமிம் இக்பாலின் 126 ரன்கள் உதவியால் 234 ரன்கள் எடுத்தது.
தொடர்ந்து விளையாடிய நியூசிலாந்து அணியின் தொடக்க வீரர்களான ஜீட் ராவல் 132, டாம் லாதம் 161 எடுத்த நிலையில், 3வதாக பேட்டிங் செய்ய வந்த வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 200* அடித்து அசத்தினார். 6 விக்கெட் இழப்பிற்கு 715 ரன்கள் குவித்து டிக்லெர் செய்தது.
நியூசிலாந்துக்கு எதிராக பவுலிங் செய்த வங்கதேச பவுலர் மெஹதி ஹசன் 49 ஓவர்கள் வீசி 246 ரன்களை வாரி வழங்கி 2 விக்கெட்டுகள் மட்டும் வீழ்த்தி உள்ளார்.
சர்வதேச அளவில் மோசமாக பந்து வீசிய வீரர்களில் மெஹதி ஹசன் 6வது இடத்தைப் பிடித்துள்ளார். இப்போட்டியில் மிக மோசமான தோல்வியை தவிர்க்க வங்கதேச அணி போராடி வருகின்றது.