"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
இந்தியாவின் கதை முடிந்தது! இரண்டாவது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்று மழையின் காரணமாக பாதிக்கப்பட்டு இன்று தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. ஆட்டத்தின் இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது ஓவர்களில் ரோகித் சர்மா(1), விராட் கோலி (1), லோகேஷ் ராகுல்(1) என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
அதனைத் தொடர்ந்து வந்த தினேஷ் கார்த்திக் 26 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து 10 ஆவலு ஓவரில் ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து சிறிது நேரம் நிதானமாக நின்று ஆடிய ரிசப் பந்த் 23 ஆவது ஓவரிலும் ஹாட்ரிக் பாண்டியா 31வது ஓவரிலும் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்தனர் மகேந்திர சிங் தோனி மற்றும் ரவீந்திர ஜடேஜா. தோனி ஒருபுறம் பொறுமையாக ஆட மறுமுனையில் ஜடேஜா நியூசிலாந்து பந்துவீச்சாளர்களை அடித்து நொறுக்க ஆரம்பித்தார். அதிரடியாக ஆடிய ஜடேஜா 39 பந்துகளில் அரைசதத்தை கடந்தார். சிறப்பாக ஆடிய ஜடேஜா 48 ஆவது ஓவரில் 77 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். தொடர்ந்து 50 ரன்கள் அடித்த தோனி ரன் அவுட் ஆகி வெளியேறினார்.
50 ஆவது ஓவரில் இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 221 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்த அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது