U19 உலகக்கோப்பை போட்டியில் அனைவரையுமே வியக்க வைத்த சுவாரஸ்ய சம்பவம்! வைரலாகும் வீடியோ



Newzland players lifted west indies player out of the groumd

தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வரும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் நேற்று நடைபெற்ற சூப்பர் லீக் காலிறுதி ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்தது வெஸ்ட் இண்டீஸ் அணி. அந்த அணியின் பேட்ஸ்மேன் கிரிக் மெக்கன்சி சிறப்பாக ஆடி 43 ஆவது ஓவரில் 99 ரன்கள் எடுத்திருந்தார். அப்போது அவருக்கு காலில் சதைபிடிப்பு ஏற்படவே மைதானத்தை விட்டு வெளியேறினார். 

U19 worldcup

பின்னர் 48 ஆவது ஓவரில் 9 விக்கெட்டுகளும் விழவே மீண்டும் கிரிக் மெக்கன்சி களமிறங்கினார். ஆனால் வந்த முதல் பந்திலேயே போல்டாகி 99 ரன்னில் ஆட்டமிழந்தார். 

காலில் ஏற்கனவே சதைபிடிப்பு ஏற்பட்டிருந்ததால் நடந்து செல்வதற்கு மிகவும் சிரமப்பட்டார் மெக்கன்சி. இதனைக் கண்ட நியூசிலாந்து அணியின் வீரர்கள் ஜெஸ்சே டாக்ஸ்ஆப் மற்றும் ஜோசப் பீல்டு இருவரும் மெக்கன்சியை தூக்கிக்கொண்டு எல்லைக் கோட்டில் விட்டனர். 

U19 worldcup

இந்த சம்பவம் கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதன் வீடியோ பதிவானது மிகவும் வைரலாகி வருகிறது. அனைவரும் நியூசிலாந்து வீரர்களின் மனிதாபிமானத்தை குறித்து பாராட்டி வருகின்றனர்.