#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
15 ஓவரிலேயே இந்தியாவை வென்று நியூசிலாந்து அணி புதிய சாதனை!
இந்தியாவிற்கு எதிரான 4ஆவது ஒருநாள் போட்டியில் 14.4 ஓவரிலேயே வென்றதன் மூலம் இந்திய அணியை குறைந்த பந்துகளில் வென்ற அணிகளில் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது நியூசிலாந்து.
5 போட்டிகள் கொண்ட தொடரின் முதல் மூன்று போட்டிகளில் வென்ற இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்யுமாறு அழைத்தது. முதல் 5 ஓவர்களில் இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான் மற்றும் ரோகித் சர்மா பொருமையாக ஆடினார்கள். போல்ட் வீசிய 6 ஆவது ஓவரிலிருந்து ஆட்டம் முற்றிலும் மாற துவங்கியது.
6 ஆவது ஓவரில் அணியின் எண்ணிக்கை 21 ஆக இருந்த போது தவான்(13), 8 ஆவது ஓவரில் ரோகித்(7) ரன்களில் போல்ட் பந்தில் அடுத்தடுத்து வெளியேறினர். அடுத்து வந்த அம்பத்தி ராயுடு மற்றும் தினேஷ் கார்த்திக் இருவரும் கிராண்ட்கோம் வீசிய 11 ஆவது ஓவரில் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். சுபம் கில் அவரும் அடுத்த ஓவரிலேயே 9 ரன்கள் எடுத்து போல்ட் பந்தில் வெளியேறினார்.
அடுத்துவந்த ஜாதவ்(1), புவனேஷ்வர் (1) வெளியேற இந்திய அணி 40 ரன்களுக்கே 7 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் ஆடிய பாண்டியா(16), குலதீப்( 15), சாகல்(18) ரன்கள் அடிக்க இந்திய அணி 92 ரன்கள் எடுத்தது.
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர் கப்டில், புவனேஷ்வர் வீசிய முதல் ஓவரின் முதல் 3 பந்துகளிலேயே 14 ரன்கள் அடித்து 4 ஆவது பந்தில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து வில்லியம்சன் 11 ரன்னில் அவுட்டாக 14.4 ஓவர்களிலேயே நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
வெறும் 88 பந்துகளில் இந்தியாவை வென்ற நியூசிலாந்து அணி குறைந்த பந்துகளில் இந்திய அணியை வென்ற முதல் அணி என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர் 2010 ஆம் 91 பந்துகளில் இந்தியாவை வென்ற இலங்கை அணி தான் முதலிடத்தில் இருந்தது.